தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் மறைவிற்குப் பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போதைய அரசியல் சூழலில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK), திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடமும் தேமுதிகவிற்கு வழங்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள்:
திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் இதோ:
Also Read: சட்டப்பேரவைத் தேர்தல் 2026: திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! முழு விபரம்
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் 2026:
திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் களம் காணும் வேட்பாளர்களின் முழு விவரம் பின்வருமாறு:
| வரிசை எண் | தொகுதி | வேட்பாளர் பெயர் |
| 1 | விருத்தாசலம் | பிரேமலதா விஜயகாந்த் |
| 2 | விருதுநகர் | விஜய பிரபாகரன் |
| 3 | திருத்தணி | டி. கிருஷ்ணமூர்த்தி |
| 4 | பல்லாவரம் | டி. முருகேசன் |
| 5 | குடியாத்தம் | பிரதாப் |
| 6 | தர்மபுரி | இளங்கோவன் |
| 7 | போளூர் | சரவணன் |
| 8 | மயிலம் | எஸ். வெங்கடேசன் |
| 9 | ஓமலூர் | இளங்கோவன் |
| 10 | சேலம் (மேற்கு) | மோகன் ராஜ் |

