HomeTN Assembly Election 2026திமுக கூட்டணி கட்சிகள் மதிமுக, கொமதே கட்சிகளின் வேட்பாளராகள் அறிவிப்பு

திமுக கூட்டணி கட்சிகள் மதிமுக, கொமதே கட்சிகளின் வேட்பாளராகள் அறிவிப்பு

திமுக கூட்டணி கட்சிகள் மதிமுக, கொமதே கட்சிகளின் வேட்பாளராகள் அறிவிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வைகோ தலைமையிலான மதிமுக இம்முறை கூட்டணி உடன்படிக்கையின்படி 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் மொடக்குறிச்சி, கடையநல்லூர் மற்றும் மதுரை தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி (தனி) தொகுதியில் தனிச் சின்னத்திலும் அக்கட்சி களம் காண உள்ளது. கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் வழிகாட்டுதலில், தொகுதி வாரியான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

அதேபோல், கொங்கு மண்டலத்தில் செல்வாக்குமிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) இம்முறை திமுக கூட்டணியில் 2 தொகுதிகளைப் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, பொள்ளாச்சி மற்றும் திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் கொமதேக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். குறிப்பாக, பொள்ளாச்சி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் கே. நித்யானந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த சுமூகமான தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

Also Read: சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேசிய முற்போக்கு திராவிட கழகம் வேட்பாளர்கள் பட்டியல்! முழு விபரம்

ம.தி.மு.க வேட்பாளராகள்

தொகுதிவேட்பாளர் பெயர்
மொடக்குறிச்சி (உதயசூரியன் சின்னம்)செந்தில் நாதன்
மதுரை தெற்கு (உதயசூரியன் சின்னம்)பூமி நாதன்
கடையநல்லூர் (உதயசூரியன் சின்னம்)ராஜேந்திரன்
சீர்காழி (தனி) – தனிச் சின்னம்செந்தில் செல்வன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராகள்

திருச்செங்கோடு. (உதயசூரியன் சின்னம்)ஈஸ்வரன்
பொள்ளாச்சி (உதயசூரியன் சின்னம்)நித்தியானந்தன்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராகள்

மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்)
நாகப்பட்டினம் (உதயசூரியன் சின்னம்)எம்.எச்.ஜவாஹிருல்லா
மணப்பாறை (உதயசூரியன் சின்னம்)ப. அப்துல்சமது

முக்குலத்தோர் புலிப்படை வேட்பாளராகள்

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)
சிவகங்கை (உதயசூரியன் சின்னம்)கருணாஸ்

மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளராகள்

சிதம்பரம் (உதயசூரியன் சின்னம்)தமிமுன் அன்சாரி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராகள்

பாபநாசம்ஷாஜஹான்
வாணியம்பாடிசையது பாருக்

(மேலும் தேர்தல் அப்டேட்களுக்கு tnelectionnews.com-ஐ தொடர்ந்து பாருங்கள்)

Stay Connected

Must Read

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.