HomeElection Commissionவாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை : தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை : தேர்தல் ஆணையம்

சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்கள் 2026: வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்

இந்திய தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய சட்டப் பேரைவகளுக்கான பொதுத் தேர்தல்,  கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான அட்டவணையை 2026 மார்ச் 15 வெளியிட்டது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறும்:

* அசாம், கேரளம் மாநிலங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு சட்டப் பேரவை பொதுத் தேர்தலும், கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலும் 09.04.2026 அன்று நடைபெறும்.

* தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலும், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் இடைத் தேர்தலும் 23.04.2026 அன்று நடைபெறும்.

* மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 23.04.2026 அன்றும் இரண்டாம் கட்டமாக 29.04.2026 அன்றும் பொதுத் தேர்தல் நடைபெறும்.

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135பி பிரிவின்படி, ஏதேனும் வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரியும் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும், வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.

அத்தகைய விடுமுறைக்காக ஊதியத்தில் எந்தப் பிடித்தமும் செய்யப்பட மாட்டாது. இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு நிறுவனமும் அபராதத்திற்கு உள்ளாகும். அனைத்து தினக்கூலி, தற்காலிகப் பணியாளர்களும் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்தல் நடைபெறும் தொகுதியில் வாக்காளர்களாகப் பதிவுசெய்துள்ள, ஆனால் தங்களது தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலை அல்லது வணிக நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்கள் (தற்காலிக, தினக்கூலித் தொழிலாளர்கள் உட்பட), வாக்குப்பதிவு நாளன்று தங்களது வாக்குகளைச் செலுத்துவதற்கு ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறும் உரிமை உடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதற்கும், அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையைச் சுதந்திரமாகவும் வசதியாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Stay Connected

Must Read

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.