திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உட்பட 15 முக்கிய அறிவிப்புகள்!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு” என்ற முழக்கத்துடன், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையிலான 15 முக்கிய வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
மகளிர் மற்றும் கல்விக்கான முக்கிய அறிவிப்புகள்
திமுக அரசின் அடையாளத் திட்டங்களாகக் கருதப்படும் மகளிர் உரிமைத் தொகை மற்றும் கல்வி உதவித் திட்டங்களில் பெரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- மகளிர் உரிமைத் தொகை: தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
- காலை உணவுத் திட்டம்: 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்த இத்திட்டம், இனி 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படும். இதன் மூலம் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.
- மாணவர் நலன்: உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
- உதவித் தொகை உயர்வு: புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
இல்லத்தரசிகளுக்கான சிறப்பு அறிவிப்பு
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய அதிரடித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது:
- வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன்: இல்லத்தரசிகள் தங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை (Home Appliances) வாங்குவதற்காக 8,000 ரூபாய் மதிப்பிலான சிறப்பு கூப்பன் வழங்கப்படும்.
Also Read : சட்டப்பேரவைத் தேர்தல் 2026: திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! முழு விபரம்
வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு விலை உயர்வு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன:
| பொருட்கள் / சேவைகள் | புதிய அறிவிப்பு |
| நெல் (குவிண்டால்) | ₹ 3,500 ஆக உயர்வு |
| கரும்பு (ஆதார விலை) | ₹ 4,500 ஆக உயர்வு |
| பால் கொள்முதல் விலை | ₹ 5 உயர்வு |
| விவசாய பம்செட் | நவீன பம்செட்டுகள் வழங்கப்படும் |
சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவம்
அனைவருக்கும் நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன:
- மருத்துவ காப்பீடு: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- உதவித் தொகைகள்: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
- மீனவர் நலன்: மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 12,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- வீட்டு வசதி: ஏழை எளிய மக்களுக்காக 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
பொருளாதாரம் மற்றும் பண்பாடு
- மகளிர் சுய உதவிக் குழுக்கள்: பெண்கள் தொழில் தொடங்க ஏதுவாக 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.
- தமிழ் வளர்ச்சி: தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்.

