2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த மெகா கூட்டணியில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகக் களம் காண்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். மேலும், துரைமுருகன் (காட்பாடி), கே.என்.நேரு (திருச்சி மேற்கு), மற்றும் எ.வ.வேலு (திருவண்ணாமலை) போன்ற மூத்த தலைவர்கள் தங்களின் கோட்டை எனக் கருதப்படும் தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், தேமுதிக-விற்கு 10 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர கூட்டணிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகியவற்றுக்கும் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பல கூட்டணிக் கட்சிகள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடுவதால், மொத்தம் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்
| எண் | தொகுதி |
வேட்பாளர் பெயர் |
| 1 | கன்னியாகுமரி |
ரெ.மகேஷ் பி.ஏ.,பி.எல். |
| 2 | நாகர்கோவில் |
எஸ்.ஆஸ்டின் எம்.ஏ. |
| 3 | இராதாபுரம் | மு.அப்பாவு |
| 4 | பாளையங்கோட்டை |
மு.அப்துல் வஹாப் பி.காம். |
| 5 | திருநெல்வேலி |
சு.சுப்பிரமணியன் பி.இ.எம்.பி.ஏ. |
| 6 | ஆலங்குளம் |
முனைவர். பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ. எம்.எல்.,பி.எச்டி |
| 7 | தென்காசி |
டாக்டர் கலை கதிரவன் எம்.பி.பி.எஸ். |
| 8 | வாசுதேவநல்லூர் |
ஈ.ராஜா பி.காம்., எம்.எல். |
| 9 | கோவில்பட்டி |
கா.கருணாநிதி |
| 10 | ஓட்டபிடாரம் (தனி) |
பி.எம்.ராமஜெயம் பி.எஸ்.சி. |
| 11 | திருச்செந்தூர் |
அனிதா ராதாகிருஷ்ணன் |
| 12 | தூத்துக்குடி |
திருமதி கீதா ஜீவன் எம்.காம்., பி.எட். |
| 13 | விளாத்திகுளம் |
ஜி.வி.மார்கண்டேயன் பி.ஏ.பி.எல். |
| 14 | முதுகுளத்தூர் |
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பி.எஸ்.சி. பி.எல். |
| 15 | இராமநாதபுரம் |
காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் |
| 16 | பரமக்குடி (தனி) |
கே.கே.கதிரவன் பி.ஏ.பி.எல். |
| 17 | திருச்சுழி |
தங்கம் தென்னரசு பி.இ. |
| 18 | அருப்புக்கோடை |
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் |
| 19 | சாத்தூர் |
அ.கடற்கரை ராஜ் |
| 20 | ராஜபாளையம் |
சௌ.தங்கப்பாண்டியன் |
| 21 | கம்பம் |
நா.ராமகிருஷ்ணன் எம்.ஏ. |
| 22 | போடிநாயக்கனூர் |
ஓ.பன்னீர்செல்வம் பி.ஏ. |
| 23 | ஆண்டிப்பட்டி | ஆ.மகராஜன் |
| 24 | திருமங்கலம் |
சேடப்பட்டி மு.மணிமாறன் |
| 25 | திருப்பரங்குன்றம் |
கிருத்திகா தங்கபாண்டி பி.இ. |
| 26 | மதுரை மேற்கு |
ரகு பாலாஜி பி.ஏ.பி.எல். |
| 27 | மதுரை மத்திய |
முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பி.டெக்., எம்.எஸ்., பி.எச்டி. |
| 28 | மதுரை வடக்கு | கோ.தளபதி |
| 29 | சோழவந்தான் (தனி) |
ஆ.வெங்கடேசன் பி.ஏ. |
| 30 | மதுரை கிழக்கு |
பி.மூர்த்தி பி.ஏ. |
| 31 | மானாமதுரை (தனி) |
ஆ.தமிழரசி ரவிக்குமார் பி.காம். |
| 32 | திருப்பத்தூர் |
கே.ஆர்.பெரியகருப்பன் பி.காம்.,பி.எல் |
| 33 | ஆலங்குடி |
சிவ வீ மெய்யநாதன் எம்.சி.ஏ. |
| 34 | திருமயம் |
எஸ்.ரகுபதி பி.எஸ்.சி., பி.எல். |
| 35 | புதுக்கோட்டை |
டாக்டர் வை.முத்துராஜா எம்.பி.பி.எஸ். |
| 36 | விராலிமலை |
கே.கே.செல்லபாண்டியன் எம்.காம்.,பி.எல். |
| 37 | பேராவூரணி |
நா.அசோக்குமார் |
| 38 | பட்டுக்கோட்டை |
கா. அண்ணாதுரை பி.எஸ்.சி.,பி.எல். |
| 39 | ஒரத்தநாடு |
ஆர்.வைத்திலிங்கம் பி.ஏ. |
| 40 | தஞ்சாவூர் |
சண்.ராமநாதன் எம்.பி.ஏ. |
| 41 | திருவையாறு |
துரை.சந்திரசேகரன் பி.ஏ.எல்.எல்.பி. |
| 42 | கும்பகோணம் |
சாக்கோட்டை கா.அன்பழகன் |
| 43 | திருவிடைமருதூர் |
முனைவர்.கோவி.செழியன் எம்.ஏ.பி.எல். பி.எச்டி. |
| 44 | திருவாரூர் |
பூண்டி கே.கலைவாணன் |
| 45 | மன்னார்குடி |
முனைவர். டி.ஆர்.பி.ராஜா பி.எச்டி. |
| 46 | வேதாரண்யம் |
மா.மீ.புகழேந்தி |
| 47 | பூம்புகார் |
நிவேதா முருகன் |
| 48 | புவனகிரி |
துரை கி.சரவணன் எம்.ஈ. |
| 49 | குறிஞ்சிப்பாடி |
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பி.எஸ்.சி. பி.எல். |
| 50 | நெய்வேலி |
சபா.ராஜேந்திரன் பிஎஸ்சி.,பிஇ. |
| 51 | திட்டக்குடி (தனி) |
சி.வி.கணேசன் எம்.ஏ.,பி.எட்., டி.காப் |
| 52 | ஜெயங்கொண்டம் |
க.சொ.க.கண்ணன் எம்.காம். |
| 53 | அரியலூர் |
திருமதி.லதா பாலு எம்.ஏ. |
| 54 | குன்னம் |
சா.சி.சிவசங்கர் பி.இ.எம்.பி.ஏ. |
| 55 | பெரம்பலூர் (தனி) |
டாக்டர். எஸ்.டி.ஜெயலட்சுமி எம்.பி.பி.எஸ்.,டி.ஜி.ஓ. |
| 56 | முசிறி |
என்.எஸ்.கருணைராஜா பி.டெக். எம்.பி.ஏ. |
| 57 | மண்ணச்சநல்லூர் |
சீ.கதிரவன் பி.இ. |
| 58 | லால்குடி |
த.பாரிவள்ளல் பி.ஏ. |
| 59 | திருவெறும்பூர் |
முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.சி.ஏ., பி.எச்.டி. |
| 60 | திருச்சி கிழக்கு |
முனைவர் இனிகோ இருதயராஜ் எம்.எஸ்.டபிள்யூ. பி.எச்டி |
| 61 | திருச்சி மேற்கு | கே.என்.நேரு |
| 62 | ஸ்ரீரங்கம் |
எஸ்.துரைராஜ் எம்.காம். எம்.பில். |
| 63 | குளித்தலை |
சூரியனூர் அ.சந்திரன் எம்.ஏ. |
| 64 | கிருஷ்ணராயபுரம் (தனி) | சி.கே.ராஜா |
| 65 | கரூர் |
ஆசி.எம்.தியாகராஜன் |
| 66 | அரவக்குறிச்சி |
மொஞ்சனூர் ஆர்.இளங்கோ பி.இ. |
| 67 | வேடசந்தூர் |
டி.சாமிநாதன் பி.காம். |
| 68 | திண்டுக்கல் |
ஐ.பி.செந்தில்குமார் எம்.ஏ.,பி.எல். |
| 69 | நிலக்கோட்டை (தனி) |
நாகஜோதி பி.காம். |
| 70 | ஆத்தூர் |
இ.பெரியசாமி பி.ஏ.,பி.ஜி.எல். |
| 71 | ஒட்டன்சத்திரம் |
அர.சக்கரபாணி |
| 72 | மடத்துக்குளம் |
இரா. ஜெயராமகிருஷ்ணன் பி.எஸ்.சி., பி.எல். |
| 73 | உடுமலைப்பேட்டை |
மு.ஜெயகுமார் பி.எஸ்.சி., எம்.ஏ. |
| 74 | வால்பாறை (தனி) |
ஆ.சுதாகர் பி.காம். |
| 75 | கிணத்துக்கடவு |
கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் பி.ஏ. |
| 76 | கோயமுத்தூர் தெற்கு |
வி.செந்தில்பாலாஜி பி.காம். |
| 77 | தொண்டாமுத்தூர் |
என்.ஆர்.கார்த்தியேன் பி.ஏ. |
| 78 | கோயமுத்தூர் வடக்கு |
செந்தமிழ்செல்வன் பி.டெக். |
| 79 | சூலூர் |
தளபதி முருகேசன் எம்.ஏ. |
| 80 | பல்லடம் | க.செல்வராஜ் |
| 81 | திருப்பூர் தெற்கு |
ந.தினேஷ்குமார் எம்.ஐ.பி. |
| 82 | அவினாசி (தனி) |
டாக்டர். கோகிலா மணி எம்.பி.பி.எஸ். |
| 83 | மேட்டுப்பாளையம் |
கவிதா கல்யாணசுந்தரம் எம்.காம். |
| 84 | குன்னூர் |
கே.எம்.ராஜூ பி.காம். |
| 85 | கூடலூர் (தனி) |
மு.திராவிடமணி எம்.ஏ.,பி.எல். |
| 86 | கோபிச்செட்டிபாளையம் |
என்.நல்லசிவம் டி.எம்.இ. |
| 87 | அந்தியூர் |
எம்.சிவபாலன் பி.காம். |
| 88 | பவானி |
கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர் எம்.ஏ. |
| 89 | பெருந்துறை |
தோப்பு என்.டி.வெங்கடாசலம் பி.ஏ. |
| 90 | காங்கேயம் |
மு.பெ.சாமிநாதன் பி.ஏ. |
| 91 | தாராபுரம் (தனி) |
டாக்டர். இந்திராணி எம்.பி.பி.எஸ்.,டி.சி.எச் |
| 92 | ஈரோடு மேற்கு |
சு.முத்துசாமி எம்.ஏ. |
| 93 | குமாரபாளையம் | எஸ்.பாலு |
| 94 | பரமத்திவேலூர் |
கே.எஸ்.மூர்த்தி பி.எஸ்சி. |
| 95 | நாமக்கல் |
ப.இராணி எம்.ஏ.எல்.எல்.பி. |
| 96 | சேந்தமங்கலம் (தனி) | பி.பூமலர் |
| 97 | இராசிபுரம் (தனி) |
டாக்டர் மா.மதிவேந்தன் எம்பிபிஎஸ்.எம்.டி. |
| 98 | வீரபாண்டி |
டாக்டர் ஆ.கா.தருண் எம்.பி.பி.எஸ்., எம்.ஏ., எம்.பி.ஏ. |
| 99 | சேலம் தெற்கு |
எம்.லோகநாதன் பி.எஸ்.சி. |
| 100 | சேலம் வடக்கு |
இரா.இராஜேந்திரன் பி.ஏ.பி.எல். |
| 101 | சங்ககிரி |
மு.மணிகண்டன் |
| 102 | எடப்பாடி | காசி |
| 103 | மேட்டூர் |
மிதுன் சக்ரவர்த்தி பி.இ. |
| 104 | ஏற்காடு (தனி) |
டி.எம்.ரேவதி மாதேஸ்வரன் |
| 105 | கெங்கவல்லி (தனி) |
கு.சின்னதுரை பி.இ. |
| 106 | சங்கராபுரம் |
தா.உதயசூரியன் பி.எஸ்சி. |
| 107 | ரிஷிவந்தியம் |
வசந்தம் கார்த்திகேயன் பி.எஸ்சி. |
| 108 | உளுந்தூர்பேட்டை |
ஜி.ஆர்.வசந்தவேல் பி.இ. |
| 109 | திருக்கோயிலூர் |
டாக்டர் பொன்.கௌதமசிகாமணி எம்பிபிஎஸ்., எம்.எஸ். |
| 110 | விக்கிரவாண்டி |
அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம் பிஏ. |
| 111 | விழுப்புரம் |
டாக்டர் இரா.லட்சுமணன் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ |
| 112 | வானூர் (தனி) |
கௌதம் திராவிடமணி பி.இ. |
| 113 | செஞ்சி |
கே.எஸ்.மஸ்தான் |
| 114 | வந்தவாசி (தனி) |
எஸ்.அம்பேத்குமார் |
| 115 | செய்யாறு |
ஓ.ஜோதி பி.ஏ. |
| 116 | ஆரணி |
மகாலட்சுமி கோவர்த்தனன் டிப்ளமோ |
| 117 | கலசப்பாக்கம் |
பெ.சு.தி.சரவணன் எம்.ஏ. |
| 118 | கீழ்பென்னாத்தூர் |
கு.பிச்சாண்டி எம்.ஏ. |
| 119 | திருவண்ணாமலை |
எ.வ.வேலு எம்.ஏ. |
| 120 | செங்கம் | மு.பெ.கிரி |
| 121 | அரூர் |
அ.சண்முகம் பி.எஸ்.சி. |
| 122 | பாப்பிரெட்டிப்பட்டி |
முனைவர். பெ.பழனியப்பன் எம்.எஸ்.சி.,பி.எச்டி. |
| 123 | பாலக்கோடு |
டாக்டர் டி.என். வி.செந்தில்குமார் எம்.பி.பி.எஸ்.,எம்.டி.ஆர்.டி. |
| 124 | வேப்பனஹள்ளி | எஸ்.ஏ. சத்யா |
| 125 | கிருஷ்ணகிரி |
பி.எஸ்.சீனிவாசன் |
| 126 | பர்கூர் |
தே.மதியழகன் பி.எஸ்சி., டி.எஃப்.டெக். |
| 127 | திருப்பத்தூர் | அ.நல்லதம்பி |
| 128 | ஜோலார்பேட்டை |
கவிதா தண்டபாணி பி.ஏ. |
| 129 | ஆம்பூர் |
அ.செ.வில்வநாதன் |
| 130 | கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) |
டாக்டர். ராஜேஸ்வரி மோகன்காந்தி எம்.பி.பி.எஸ். |
| 131 | அணைக்கட்டு |
ஏ.பி.நந்தகுமார் எம்.ஏ. |
| 132 | வேலூர் |
ப.கார்த்திகேயன் |
| 133 | ஆற்காடு |
ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பி.இ. |
| 134 | இராணிப்பேட்டை |
வினோத் காந்தி பி.எஸ்.சி. |
| 135 | காட்பாடி |
துரைமுருகன் எம்.ஏ.,பி.எல். |
| 136 | காஞ்சிபுரம் |
திருமதி. நித்யா சுகுமார் |
| 137 | உத்திரமேரூர் |
க.சுந்தர் பி.எஸ்.சி. |
| 138 | மதுராந்தகம் (தனி) |
எஸ்.அமுலு பொன்மலர் |
| 139 | செங்கல்பட்டு |
எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி பி.ஏ.பி.எல். |
| 140 | தாம்பரம் |
டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி எம்.பி.பி.எஸ்.டி.ஜி.ஓ. |
| 141 | ஆலந்தூர் |
தா.மோ.அன்பரசன் |
| 142 | சோழிங்கநல்லூர் |
ச.அரவிந்த் ரமேஷ் |
| 143 | மயிலாப்பூர் |
தா.வேலு பி.ஏ. எல்.எல்.பி. |
| 144 | தியாகராயநகர் |
ராஜா அன்பழகன் பி.காம். |
| 145 | சைதாப்பேட்டை |
மா.சுப்பிரமணியன் பி.ஏ.எல்.எல்.பி. |
| 146 | விருகம்பாக்கம் |
பிரபாகர்ராஜா எம்.டெக்., எம்.பி.ஏ. |
| 147 | அண்ணாநகர் |
நே.சிற்றரசு எம்.ஏ.எம்.பில். |
| 148 | ஆயிரம் விளக்கு |
டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.பி.பி.எஸ். எம்.டி. |
| 149 | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
உதயநிதி ஸ்டாலின் பி.காம். |
| 150 | துறைமுகம் |
பி.கே. சேகர்பாபு |
| 151 | இராயபுரம் |
டாக்டர். சுபேர்கான் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ |
| 152 | எழும்பூர் (தனி) |
தமிழன் பிரசன்னா பி.எல். |
| 153 | திரு.வி.க.நகர் (தனி) |
கே.எஸ்.ரவிச்சந்திரன் பி.எஸ்.சி.,பி.எல். |
| 154 | வில்லிவாக்கம் |
கார்த்திக் மோகன் பி.இ.எம்.எஸ். |
| 155 | பெரம்பூர் |
ஆர்.டி.சேகர் பி.காம்., பி.எல். |
| 156 | டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் |
ஜே.ஜே.எபினேசர் எம்.காம், .பி.எல். |
| 157 | மாதவரம் |
எஸ்.சுதர்சனம் எம்.ஏ.பி.எல். |
| 158 | அம்பத்தூர் |
டாக்டர் அ.பு.பூர்ணிமா எம்.பி.பி.எஸ். எம்.டி. |
| 159 | மதுரவாயல் |
காரம்பாக்கம் கணபதி |
| 160 | ஆவடி | சா.மு.நாசர் |
| 161 | பூந்தமல்லி |
ஆ.கிருஷ்ணசாமி பி.ஏ.பி.எல். |
| 162 | திருவள்ளூர் |
வி.ஜி.ராஜேந்திரன் பி.இ. |
| 163 | கும்மிடிப்பூண்டி |
டி.ஜெ. கோவிந்தராஜன் |
| 164 | கொளத்தூர் |
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் |
