HomeElection Commissionசட்டப்பேரவைத் தேர்தல் 2026: மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

- Advertisement -spot_img

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் மற்றும்  அதன் எல்லைகளில் அமைந்துள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை தலைவர்கள் மற்றும்  உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம்  இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தியது. அப்போது வன்முறையில்லாத,  மிரட்டல் இல்லாத மற்றும் தூண்டுதல் இல்லாத  தேர்தல்களை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியது.  ஒருங்கிணைப்பை மேம்படுத்துமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. 

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ் எஸ் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் வாக்குப்பதிவுக்கான தயார்நிலை, சட்டம், ஒழுங்கு நிலைமை சட்டவிரோத ரொக்கம், மதுபானம்,  போதைப்பொருள், ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பற்றியது குறித்தும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைச் சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்,  யூனியன் பிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் எல்லைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பை உறுதி செய்யுமாறு அமலாக்கத்துறை இயக்குநரகம், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, எல்லைப்பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப்படை, அஞ்சல் சேவை, இந்தியக் கடலோரக் காவல்படை, அசாம் ரைஃபிள்ஸ் உள்ளிட்ட முகமைகளின் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Stay Connected

[td_block_social_counter facebook="#" manual_count_facebook="16985" manual_count_twitter="2458" twitter="#" youtube="#" manual_count_youtube="61453" style="style3 td-social-colored" f_counters_font_family="450" f_network_font_family="450" f_network_font_weight="700" f_btn_font_family="450" f_btn_font_weight="700" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9fQ=="]

Must Read

- Advertisement -spot_img

Related News

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.