Home சினிமா 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை

10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை


ஹைலைட்ஸ்:

  • நிக் ஜோனஸுடனான வயது வித்தியாசம் பற்றி ப்ரியங்கா பேட்டி
  • திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்த ப்ரியங்கா சோப்ரா

விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானவர் உலக அழகிப் பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிறகு ஹாலிவுட் சென்றுவிட்டார். தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ப்ரியா ஹாலிவுட் சென்றபோது தன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் ஜெய்பூர் மாளிகையில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு ப்ரியங்கா தன் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ப்ரியங்கா தன்னை விட வயதில் சின்னவரை திருமணம் செய்து கொண்டதற்காக சமூக வலைதளங்களில் அவரை அவ்வப்போது கிண்டல் செய்கிறார்கள். 10 வருட சவால் பிரபலமானபோது ப்ரியங்கா, நிக் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்தார்கள். அதை பார்த்த திரையுலக பிரபலங்கள் சிலர் கோபம் அடைந்து சமூக வலைதளவாசிகளை விளாசினார்கள். ஆனால் ப்ரியங்கா இதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் ப்ரியங்கா தன் கணவர், கெரியர், குழந்தைகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் ப்ரியங்கா கூறியிருப்பதாவது,

எனக்கும், கணவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசத்தால் பிரச்சனையே இல்லை. மேலும் அவர் அமெரிக்கர், நான் இந்திய பெண் என்பதால் கலாச்சார வித்தியாசத்திலும் எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை.

பிற தம்பதிகளை போன்று தான் நாங்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். இதில் எந்த கஷ்டமும் இல்லை. லாக்டவுன் நேரத்தில் நிக்குடன் நேரம் செலவிட முடிந்தது ஒரு ஆசிர்வாதம். எங்களின் கெரியரால் தொடர்ந்து இத்தனை நாட்களாக சேர்ந்து இருக்க முடியாது.

எனக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை இருக்கிறது. முடிந்த அளவுக்கு நிறைய குழந்தைகள் பெற வேண்டும். ஒரு கிரிக்கெட் டீம்?. சரியாத் தெரியவில்லை என்றார்.

ப்ரியங்கா சோப்ரா தன் சுயசரிதையான Unfinished புத்தகத்தை விரைவில் வெளியிடப் போகிறார். அதில் உலக அழகிப் பட்டம் வென்றது முதல் ஹாலிவுட் சென்றது வரை, மேலும் தன் வாழ்க்கை பயணம் தொடர்வது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
சீனியர் நடிகையை காதலிக்கும் இளம் ஹீரோ: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

நெட்ஃபிக்ஸ் முதல் முறையாக 200 மில்லியன் சந்தாதாரர்களை மிஞ்சிவிட்டது

ஸ்ட்ரீமிங் இயங்குதளம் கடந்த ஆண்டு மேலும் 37 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றது, இது 2019 ஐ விட 22% அதிகரித்துள்ளது நெட்ஃபிக்ஸ் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை முதன்முறையாக 200 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிவிட்டது,...

அரசியலமைப்பின் கீழ் சூதாட்டத்தை பாதுகாக்க முடியாது, TN அரசு உயர் நீதிமன்றத்தில் கூறுகிறது

சூதாட்டத்தை ஒரு வர்த்தகம் அல்லது வணிகமாக கருத முடியாது. ஆகையால், ஆன்லைன் ரம்மியை பங்குகளுடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (ஜி) இன் கீழ்...

COVID-19 நோய்த்தடுப்பு பாதுகாப்பு குறைவாக – இந்து

தடுப்பூசி போடுவதற்கான ஆரம்ப கட்டத்தில் யூனியன் பிரதேசத்தில் உள்ள COVID-19 நோய்த்தடுப்பு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் யானம் ஆகிய மையங்களில் உள்ள தடுப்பூசி அட்டவணையின் முதல் மூன்று...

ஒரு புயலை சமைத்தல்: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இல்

ஒரு புதிய படம் தனிப்பட்ட கிளர்ச்சிகள் தான் மேலாதிக்கத்தை சவால் செய்வதில் முக்கியமானதாக நிரூபிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசனின் கட்சி அறிக்கையில் தமிழகம் வீட்டு வேலைகளை உழைப்பாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும்...

Recent Comments