Home சினிமா தல ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்: வலிமை படத்தின் அப்டேட்!

தல ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்: வலிமை படத்தின் அப்டேட்!


2019 ஆம் ஆண்டில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கிய இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா போன்றோர்கள் நடித்திருந்தனர்.

நேர் கொண்ட பார்வை படம் இயக்குநர் வினோத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. அதைத் தொடர்ந்து ‘வலிமை’ படத்தையும் எச். வினோத் இயக்கியுள்ளார்.

வலிமை படத்தில் அஜித் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போலீஸ் கேரக்டருக்காக வெயிட்டை குறைத்துள்ளாராம் அஜித். படத்தில் அவர் பெயர், அர்ஜுன் எனவும் கூறப்படுகிறது.

‘என்னை அறிந்தால் படத்தில் அப்பா – மகள், ‘வேதாளம்’ படத்தில் அண்ணன் – தங்கை, ‘விஸ்வாசம்’ படத்தில் மீண்டும் அப்பா – மகள் என ஃபேமிலி, எமோஷனல் மிக்ஸிங் ஜானர்களே செலக்ட் செய்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் அஜித். அந்தவகையில் இந்த முறை அம்மா மகன் பாசப் பிணைப்பை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் வினோத்.
மாஸ்டர் படம் பார்க்க ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இயக்குநர்
படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹூமா, புல்லட் ஓட்டும் காட்சி ஒன்றும் இடம் பெறுகிறதாம். இதற்கு முன் பைக் ஓட்டி பழக்கமில்லாத ஹூமா இதற்காகவே புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறார். பைக் பழகியதும், மும்பை ரோடுகளில் ஓட்டியும் மகிழ்ந்திருக்கிறார் ஹூமா.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கும் ஆபீசர் வேடத்தில் நடித்த கன்னட நடிகர் அச்யுத் குமார், இதில் அஜித்தின் குடும்பத்தில் ஒருவராக நடிக்கிறார்.

நடிகர் அதர்வா நடித்த ‘நூறு’ படத்தின் வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறார். இது தவிர ‘வடசென்னை பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் நடிக்கிறார்கள்.
மாஸ்டரை பார்த்துட்டு ஒத்த வார்த்தையில் விமர்சித்த சூரி
‘தீரன்’ படத்தில் இந்தி, மராத்தி நடிகர்களை அறிமுகப்படுத்தியது போல, இதிலும் பல மாநில நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.

படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் இதுவரை பிரேமதோ மீ கார்த்தி, ஆர்.எக்ஸ் 100, ஹிப்பி குணா 369, 90 எம்.எல் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஆர்.எக்ஸ் 100 எனும் ஆக்ஷன் + காதல் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அஜித்தின் ரசிகரான கார்த்திகேயா, தன்னுடைய ஃபேவரைட் தலயுடன் நடிக்க விரும்பி இப்படத்தில் நடித்துள்ளார. படத்திற்காக, இவர் பல மாதங்கள் டயட், ஃபிட்னஸ் கண்ட்ரோலில் இருந்து சிக்ஸ் பேக் உடற்கட்டு கொண்டு வந்திருக்கிறார்.
மாஸ்டர் முன் ஈஸ்வரன் ஒரு படமே கிடையாது: தயாரிப்பாளர் காட்டம்!
இப்போது இவர் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடித்து தமிழில் அறிமுகமாக இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை டெக்னீஷியன் டீமே இப்படத்திலும் பணியாற்றி உள்ளார்கள்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி உள்ளாராம். அப்பாடல் ‘ஆலுமா டோலுமா’ பாடலைப் போலவே இந்த ஆண்டின் தெறிக்கும் பாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

COVID-19 நோய்த்தடுப்பு பாதுகாப்பு குறைவாக – இந்து

தடுப்பூசி போடுவதற்கான ஆரம்ப கட்டத்தில் யூனியன் பிரதேசத்தில் உள்ள COVID-19 நோய்த்தடுப்பு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் யானம் ஆகிய மையங்களில் உள்ள தடுப்பூசி அட்டவணையின் முதல் மூன்று...

ஒரு புயலை சமைத்தல்: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இல்

ஒரு புதிய படம் தனிப்பட்ட கிளர்ச்சிகள் தான் மேலாதிக்கத்தை சவால் செய்வதில் முக்கியமானதாக நிரூபிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசனின் கட்சி அறிக்கையில் தமிழகம் வீட்டு வேலைகளை உழைப்பாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும்...

சாலை பாதுகாப்பு மாத கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான மத்திய அரசின் முன்முயற்சியான சாலை பாதுகாப்பு மாதத்தின் தொடக்க கொண்டாட்டங்கள் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் வரம்பில், கொண்டாட்டங்களை போக்குவரத்துத்...

78 வயதான மனிதருக்கு ‘ஹைப்ரிட்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்கள், தமனி பெருநாடி சிதைவை உருவாக்கிய 78 வயதான மனிதருக்கு இரத்த தமனிகள் சம்பந்தப்பட்ட உயர் ஆபத்துள்ள 'கலப்பின' அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக...

Recent Comments