Home சினிமா ஈஸ்வரன் ரிலீஸை வச்சுக்கிட்டு மாஸ்டரை பத்தி சுசீந்திரன் இப்படி சொல்லிட்டாரே

ஈஸ்வரன் ரிலீஸை வச்சுக்கிட்டு மாஸ்டரை பத்தி சுசீந்திரன் இப்படி சொல்லிட்டாரே


மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்திருக்கிறார் சுசீந்திரன். படத்தை பார்த்த அவரால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி மோதிக் கொண்ட மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் எல்லாம் சந்தோஷத்தில் உள்ளனர். மற்றவர்களோ இது லோகேஷ் படமே இல்லை, விஜய் படம். எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்று ஏமாந்துவிட்டோம். படம் ரொம்ப நீளம், இரண்டாம் பாதி எப்பொழுது முடியும் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு படம் பிடித்திருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த பொங்கலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து வரும் ஈஸ்வரன் படத்தை இயக்கியிருக்கும் சுசீந்திரன் விஜய் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

சுசீந்திரன்

சுசீந்திரன் மாஸ்டரை பாராட்டி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சுசீந்திரன் கூறியிருப்பதாவது, விஜய் சாரின் மாஸ்டர் திரைப்படம் பார்த்தேன். எங்கள் ஊரில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தேன். ஒரு வருஷம் கழிச்சு பெரிய திருவிழாவுக்கு வந்தது மாதிரியான சந்தோஷம் கிடைச்சிருக்கு. துப்பாக்கிக்கு பிறகு விஜய் சார் நடிப்பில் எனக்கு ரொம்ப பிடித்த படம் மாஸ்டர். இது மாஸ்டர் பீஸாகவே அமைந்திருக்கிறது. விஜய் சார் ரொம்ப பிரமாதமாக நடித்திருக்கிறார் என்றார்.

மாஸ்டர் பொங்கல்

இந்த மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட்டை விஜய் சாருக்கு படம் பண்ண லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துக்கள். திரைக்கதையை கையாண்ட விதம் பிரமாதமாக இருக்கிறது. ஒவ்வொரு காஸ்டிங்கும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. குறிப்பாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அருமை. வில்லத்தனத்தை ரொம்ப ரசிக்கும்படி பண்ணியிருக்கார். கண்டிப்பாக இந்த படம் இந்த பொங்கலுக்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. முன்பு போக்கிரி பொங்கல் இது மாஸ்டர் பொங்கல். விஜய் சாருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும், சேதுவுக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

ஈஸ்வரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இது மாஸ்டர் பொங்கல் என்று சுசீந்திரன் கூறியதை கேட்ட விஜய் ரசிகர்கள் ஃபீல் செய்துள்ளனர். இப்படி பாராட்ட பெரிய மனசு வேண்டும், அது உங்களிடம் இருக்கிறது. ஈஸ்வரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் சுசீ சார் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சுசீந்திரனின் வீடியோவை பார்த்த சினிமா ரசிகர்களும் அவரின் நல்ல மனதை பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

தருண் பாஸ்கர், நந்தினி ரெட்டி, நாக் அஸ்வின் மற்றும் சங்கல்ப் ரெட்டி இயக்கிய தெலுங்கு ஆந்தாலஜி படமான ‘பிட்டா கதலு’ நெட்ஃபிக்ஸ் அறிவிக்கிறது

தாரூன் பாஸ்கர், பி.வி.நந்தினி ரெட்டி, நாக் அஸ்வின் மற்றும் சங்கல்ப் ரெட்டி இயக்கிய பெண்களின் கதைகள் இந்த ஆந்தாலஜி படத்தில் உள்ளன தமிழ் ஆந்தாலஜி படத்தைத் தொடர்ந்து பாவா கதைகல் சமீபத்தில், நெட்ஃபிக்ஸ்...

100 அடி சாலை சிக்கல் சாலை பயனர்களில் திறந்த வடிகால் மற்றும் சேதமடைந்த நடைபாதை

100 அடி சாலையில் நடைபாதையின் நிலை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டி.பி. சாலை, ஆர்.எஸ்.புரம் என்பதற்கு முற்றிலும் மாறுபட்டது. இரண்டு சாலைகளும் வணிக வீதிகளாக உள்ளன, அவை பல...

திருத்தத்திற்குப் பிறகு, புதுச்சேரியில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்

மகே, யானம் உள்ளிட்ட 25 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள வாக்காளர்களின் அளவு 8,42, 217 வாக்காளர்களாக வளர்ந்துள்ளது.புதன்கிழமை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் பூர்வா...

நெட்ஃபிக்ஸ் முதல் முறையாக 200 மில்லியன் சந்தாதாரர்களை மிஞ்சிவிட்டது

ஸ்ட்ரீமிங் இயங்குதளம் கடந்த ஆண்டு மேலும் 37 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றது, இது 2019 ஐ விட 22% அதிகரித்துள்ளது நெட்ஃபிக்ஸ் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை முதன்முறையாக 200 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிவிட்டது,...

Recent Comments